Chennaizoom
 
Select Menu to go :
Select New Category:
SEARCH AD
Ad#
Example
AD588
 
TAMIL SITES
Anna and Dravidians
Ancient Tamil
Cheras
Theeran Chinnamalai
Light of Thuvarankuruchi
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Murugan Tamil / Aryan
Pattinathar
Poombuhar under sea
Quotes
Raja Rajan History

சங்க கால உணவு

Tamil Chemmozi
Tamil Kavaithai
Tamil Nadu Informations
Tamil New Year
Tamil Words
NEWS
Home
Afghanistan
Arab and Chine
Anna Hazare
Beautiful Earth View
Bulk Sms
Budget 2011-12
Buy Indian
Chennai Related Informations
Creator of Human Life
English Punctuation
Death Sentance
De Recognized University

Faith

Faith by Healing
Govt.Greviance Forum
Health
Human Right - A Woman
Human Right - B Woman
Indian Culture at Airport
Indian Top 10 List
Indian Top 10 Corrupted
Illusion
Jan Lokpal Bill
Jokes
Khasmir by Bhushun
Kids (GrandPa & GrandMa)
Kolaiveri by Dhanush
Liberhan Report
Life form Synthetic cell
Lokayukta Report
Kiran Bedi's Motivation
Kolaiveri Songs
Metro Train
M.F.Hussain
MonoRail
Mobile Lost
Mullai Periyar
National Award 2010
Photos of your body
Quotes
Register Marriage
Religion Related Information
Repo Rate
RTI activist murdered
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N. Ministers 2011
Scholarship available
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tamil Related Informations
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transport
Vachathi. Criminals.
Women in Military Photos
World richest man
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 

 
CHENNAI INFORMATIONS

Anna Library Kotturpuram

Auto Fare 2007
Be Indian
Budget 2010
CVCommission Advise
CVCommission Penality
Corporation Acievements
Chennai Cops
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Health
Hospital Phone
Online Grievance Forum
Projects in north chennai
T.N.Election 2011
Tamil Nadu
Tamil Sites
T.N.MLAs 2011
T.N.Ministers 2011
The Boss
The Cops
Transport
PREMIUM AD
Accounts Package
Arcot Plot for 1 Lakh
Hyundai Car Showroom
K7 Antivirous
Kovai Plot sale
Madamabakkam New Flat Sale
Madipakkam Plot Sale
Mahindra Car Show Room
Maraimalai Nagar Land for sale
Pallikaranai Plot sale
Perumbakkam Plot for sale.
Perungudi House for Sale
Puthupattinam ECR Land Sale
Salavakkam Plot for sale
Security Control System
Tambaram New Flat Sale
Thiruvallur DTCP plot available
Uthandi Approved Plot sale
Uthiramerur Land Sale
Wireless Detective System
Wireless Motor Control
Wireless Twin tank one sump Controller
NEWS
Home
Afghanistan
Arab and Chine
Anna Hazare
Beautiful Earth View
Bulk Sms
Budget 2011-12
Buy Indian
Chennai Related Informations
Creator of Human Life
English Punctuation
Death Sentance
De Recognized University

Faith

Faith by Healing
Govt.Greviance Forum
Health
Human Right - A Woman
Human Right - B Woman
Indian Culture at Airport
Indian Top 10 List
Indian Top 10 Corrupted
Illusion
Jan Lokpal Bill
Jokes
Khasmir by Bhushun
Kids (GrandPa & GrandMa)
Kolaiveri by Dhanush
Liberhan Report
Life form Synthetic cell
Lokayukta Report
Kiran Bedi's Motivation
Kolaiveri Songs
Metro Train
M.F.Hussain
MonoRail
Mobile Lost
Mullai Periyar
National Award 2010
Photos of your body
Quotes
Register Marriage
Religion Related Information
Repo Rate
RTI activist murdered
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N. Ministers 2011
Scholarship available
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tamil Related Informations
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transport
Vachathi. Criminals.
Women in Military Photos
World richest man
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 

Chennai | Corruption | Health | Jokes | Religion | Tamil | Tamil Nadu | Transport | Women

கவிதை

மனிதர்கள்

மனதை நெருடிய கவிதை...
கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்.

நெற்றியில் பட்டை... இட்டால் ஹிந்து.

தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.

ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.

கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன். 

இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!! 

எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால் 
நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் .....?
- Karthikeyan Petchiappan

அன்பு

என்னை 
வெல்வதற்கு 
யாரும் இல்லை. 
உன் அன்பைத் தவிர... 
அது போலவே 
என்னை 
கொல்வதற்கும் 
யாரும் இல்லை. 
உன் பிரிவைத் தவிர
- Ibrahim Mohamed S

கோலம்

தெருவடைக்க கோலம் போட்டபின்
தெருவடைக்க அலங்கோலப்படும்
யாரோ ஒருத்தியின் வீட்டுக் கோலம்!
By : Gauthaman

தெருவடைக்க கோலம் போட்டேன்
அல்லோலப்பட்டது
அடுத்தவர் கோலம்.
By : Chennaizoom

 

ஐந்தாண்டு திட்டம்

அசையும் நாற்காலியில்
அசையா சொத்துக்களின் பதவிப்பிரமாணம்
ஐந்தாண்டு திட்டம்
- Karthikeyan Petcha

கடவுள்

மன்னில் மனிதனுக்குப் பல வேசம்.
வேசத்திற்க்குக் கடவுள் துனைப் போகும்.

தலையில் தொப்பி
தலைப்பா, குடும்பி

உடம்பில் கயிரு
கோவிலுக்கு மயிரு

கழுத்தில் மாலை
தோளில் சால்வை

நெத்தியில் பட்டை
பின்னால் கொண்டை.

கடவுளுக்கு மிருகம் துனை.
மனிதனுக்கு மிருகம் பகை.

கடவுளுக்குப் பெறிய மேடை.
மனிதனுக்குப் படி மேடை.

கடவுளுக்குத் தங்கம், வெள்ளி.
மனிதனுக்குத் தங்க வெளியில்.

கடவுளுக்கு மிருகத்தை வெட்டு.
மனிதனுக்குக் கடவுளைத் திட்டு.

நான் வந்தால் கடவுளுக்குப் பாட்டு
நீ வந்த்தால் கடவுளுக்குத் தீட்டு.

நான் சொல்லும் கடவுள் உண்மை.
நீ சொல்லும் கடவுள் மடமை.

விரல் நீட்டி கடவுள் வருமோ?
கட்டம் போட்டு கடவுள் வருமோ?

தலையில் குட்டி கடவுள் வருமோ?
தரையில் உருண்டு கடவுள் வருமோ?

நீரில் குளித்தால் கடவுள் வருமோ?
நெருப்பில் நடந்தால் கடவுள் வருமோ?

பட்டினி இருந்தால் கடவுள் வருமோ?
பலி கொடுத்தால் கடவுள் வருமோ?

மலை ஏறி கடவுள் வருமோ?
மனதைத் தொட்டால் கடவுள் வருமே!

சாகுவதே தெறியாது
செத்தப்பின் தெறிந்திடுமோ?

பசித்திருக்கும் உயிர்களுக்குப்
புசிக்கக் கொடுத்தால் கடவுள் வருமே?

- ChennaiZoom
தமில்! 
மன்னித்துவிடு ஸாரி*
என்று சொல்லி 
மண்டியிட்டு கிடக்கிறது என் அன்னை தமிழ் ! 
- A. Rajthilak

பென் கல்விக்கு தண்டனை

பென்னுக்கு மட்டும் தடயா?
மதத்தின் பெயரால் மடைமையா?
உணராத மதத்தில் உண்மை உண்டா?
உண்மை உணர்ந்த உள்ளம் ஏதடா?
உள்ளம் இல்லா மதத்தை துறடா.
துறந்த மனிதன் தூயவன் என்பது
துறவிகள் கண்ட தவபயன் தானது.

- Chennaizoom

கொலை

ஒரு நாள் வாழ்க்கை பூவிற்க்கு,
அதை பறித்து அர்சசனை செய்கிறான்,
தனக்கு நீண்ட ஆயுள் வேண்டி!
-Karthick An
மனது
எதுவுமே பேசாமல் சென்றாள்
விடாமல் பேசிக்கொண்டே
மனது!

அவளின் புரியாத கோபத்தால்
என் மீது கோபத்தில் 
மனது!

திட்டக்கூட இல்லை
இருந்தும் என்னைத் திட்டியபடி
மனது!

செத்துப் போனேன்
இன்னமும் விடாமல் துடித்தபடி
மனது!
- Gauthaman

குழந்தையின் கிறுக்கல்!

நட்சத்திர ஓட்டல் சுவற்றில்
அளவெடுத்த பிரேமுக்குள் அடங்கிய
நவீன ஓவியம்
ஒருபோதும் விளங்கியதில்லை;
விளங்காவிட்டாலும்
ரசிக்கத் தூண்டுது
சுவரெங்கும் நிறைத்த
குழந்தையின் கிறுக்கல்!
- Gauthaman
 
     

வழித்துணை

அவளுக்காக
கத்திருக்கும் என்னை
வந்துவந்து பார்த்து
ஆறுதல் சொல்லித் திரும்பும்
அலைகள்!

வளைதாண்டி வந்து
நண்டுகளும் கூட
விளையாட்டுக் காட்டி
என்னை மகிழ்விக்கும் முயற்சியில்!

இரண்டாவது முறையாக
என்னருகே வந்து
"சுண்டல் வேணுமா?"
எனக் கேட்ட சிறுவனும்
அடுத்த முறை
அடையாளம் பார்த்து
விலகிச் செல்கிறான்!

தூரத்து கடலில்
சின்னதாய்த் தெரிந்த கப்பலும்
கோடாகி, புள்ளியாகி
மூழ்கியே போனது
ஏதோவொரு நொடியில்!

குறுஞ்செய்தியில்லை;
அழைப்புக்கும் வழியின்றி
அணைக்கப்பட்ட செல்பேசியால்
கனத்துப் போயிருந்தது
கையிலிருந்த செல்பேசி!

இத்தனை காலமாக
நாங்கள் ரசித்த நிலவும்
எட்டிப் பார்த்து விட்டது;
அவளில்லாமல் கிளம்பும்
பொழுதுகளிலெல்லாம்
என்னைத் தேற்றியபடி
வீடுவரை வரும் நிலவு
வழித் துணையாக!
By : Gauthaman

 

கோலம்

அலங்கோலப்படும்
யாரோ ஒருத்தியின் வீட்டுக் கோலம்! —
அனுமதியுடன் எனில் அகம் மகிழும்
அனுமதியின்றி எனில் ஆத்மா அழும்
By : Sona Kiran

புள்ளி வைச்ச கோலமானேன்...தள்ளி வச்ச அலங்கோலமானேன்-
By : Vijay Prasanna

தெரு பத்தல அவளுக்கு...
குளிர் தெரியல இவனுக்கு...
காதல்...!!!
By : Senthilkumar Nadesan

புறா

அந்தப் புறா அவ்வளவு விரைவாக வெற்றுவெளியில்
வெற்று வெளியாகப் பறந்தது
மரத்திலமர்ந்தவேளை
வெற்றுவெளியில் பறவையில்லை
பறக்காத வெற்றுவெளி
பறக்காத பறவையெனில்
அது இறந்திருக்கக்கூடும்
இறந்தவிட்ட பறவை 
வெற்று நிலத்தில் பறக்கவில்லை
வெற்று நிலமோ சுழன்று 
பறப்பதறியாமல் பறக்கிறது
நாமும் பறவைதான் 
நிலத்தோடு சேர்ந்து சுழன்று பறக்கிறோம்
பறக்காத பறவையாகும்போது
நாமும் இறந்திருக்கக்கூடும்.
- Iyappa Madhavan
 

அர்சனை

ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும்போதும்
அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்ததுமே
அத்தனை பேரின் 
பெயர், ராசி, நட்சத்திரத்தையும்
மனப்பாடமாக ஒப்பிக்கிறாள்;
கடவுளுக்குத்தான்
இன்னமும் மனப்பாடமாகவில்லை!
- Iyappa Madhavan

பூ

மார்கழி விடியலிலேயே
மஞ்சள் பூசிக் குளித்து
காத்திருக்கும் பூசணிப்பூ...
அவள் கோலம் பார்க்க!
- Gauthaman

முப்பது வயதில்

மூன்று வயது
மகனுக்கு
நாயை காட்டி
நாயென்றும்
கழுதையை காண்பித்து
கழுதையென்றும்
பன்றியை பார்த்து
பன்றியென்றும்
சொல்லிக்கொடுத்தேன்
அவற்றையெல்லாம்
அழகாகச் சொன்னான்
என் மகன்
முப்பது வயதில்
என்னைப் பார்த்து.........
- Mohamed Mubarak

மனமே ஓ மனமே நீ மாறிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
-  பா . விஜய் Autograph

ஒரு மனிதன் இருந்தால்

”இடிந்து கிடக்கின்றன மசூதிகள்…

இடிபாடுகளின் உள்ளிருந்து

எட்டிப் பார்க்கிறான்

இறைவன்…

எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள்

சாம்பல் குவியலில்

மெல்ல அசைகிறது

கர்த்தரின் தலை

காயம்பட்டுக் கிடக்கின்றன கோவில்கள்

காதுகளைப் பொத்தியபடி

கடவுள்

வேடிக்கை பார்த்துக்

கொண்டிருக்கும்

கூட்டத்தை நோக்கி

மூவரும் நோக்கி

ஒரு கேள்வி

உங்களில் யாராவது

ஒரு மனிதன் இருந்தால்

வரச் சொல்லுங்கள்

ஒன்றாக நாங்கள்

உயிர்த்தெழுகிறோம்” 

---(மு.மேத்தா
- Karthikeyan Petchiappan
வானோர் வரம்

நதிநதி கரை கையில் கரையுமொரு காலம்

கரைவரை கரம்பிணை நதியுமொரு தூரம்

உதிர்உதிர் சருகென மிதந்துநினைவோடும்

சருகொரு சிறகென நதியில் விளையாடும்.

 

கரைகரை விளிம்பென கனவு வழிந்தோடும்

மழைதுளி துளிரிலை தொடவுமது நாணும்

விளிவிளி வருகிறேன் எனவும் மழை கூறும்.

கனவிலா இரவிலும் அருவக்குயில் பாடும்.

 

சிறுசிறு வரிகளில் கவிதை சிசு வாழும்

வரியிடை வெளிகளில் பிரியம் வழிந்தோடும்

சரிசரி விடுவெனக் கிளம்புகிற நேரம்

இடைஇடை விரல்பட இளகுகிற நீயும்

 

தொடுதொடு தொடர்கதை சிறியதல்ல காமம்

அடர்வன மழைவிடும் கதிரெனவே பாயும்

சகிசகி அணை கையில் சுடரெனவே நானும்

பொறுபொறு தொடர்சுடர் பெரியதென்று நேரும்.


- by ஆத்மார்த்தி கவிதைகள் on Sunday, February 5, 2012

மௌனகதை…

பார்வைக்கு வருமுன்னே,

பப்பாளிப் பழத்துக்கும்

பலவிதமாய் மாத்திரைக்கும்

கள்ளிப் பாலுக்கும்

கவள நெல்லுக்கும்

தப்பிப் பிழைத்து

தரைக்கு வந்தது

தனிக்கதை…



பால வயதினிலே,

படிக்க வைக்க மனமின்றி

பள்ளிக்கு அனுப்பியதும்,

கொள்ளிக்குப் பிள்ளை முன்னே

குறைபட்டு நின்றதும்

குற்றேவல் செய்ததெல்லாம்

வளர்ந்த கதை…



வேலைத் தலங்களிலே

வேறுபட்ட பார்வைகளில்

வேதனையில் வீழ்ந்ததுவும்,

காதலெனும் மாயவலையில்

கால்மாட்டி நின்றதுவும்,

மணமேடையை மறைத்திடும்

வரதட்சணை வேலி கண்டு

வெந்து வாடியதும்,

கறுப்பு சிவப்பு

குட்டை நெட்டையெனக்

கழற்றி விட்டதுவும்,

காத்திருந்து காத்திருந்து

முற்றத்து முருங்கையென

முற்றி நின்றதுவும்..

பல இவைபோல்

பருவம் கண்டகதை…



மணமேடை மிதித்தவுடன்

மாறாட்டங்கள்..

இல்லறத்தில் இல்லாத

இடர்ப்பாடுகள்..

நேற்றைய மணமகள்களின்

நாட்டாமைகள்-

வெடிக்கும் ஸ்டவ்வாய்

வேறு பலவாய்..

பல்கலைக் கழகங்கள்

பார்த்திராத பட்டங்கள்..

பிள்ளைகள் பெற்றுப்

பெரிதாய் வளர்த்திடும்

பாதையில் சோதனைகள்

கதைகதையாய்…



வயது முதிர்ந்தபின்

வந்திடும் வேதனையில்

முதியோர் இல்லங்களும்

முகம்சுழிக்கும்

மௌனகதை…
- Nagoorkani Kader Mohideen Basha
 

கடவுளாக நடிக்கும் மனிதன் தெய்வம் ஆகுமோ

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் 
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விறிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம் 
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் 
படப் பாடல்

கடவுளாக நடிக்கும் மனிதன் தெய்வம் ஆகுமோ?
உளைப்பில்லா வந்த பணம் உண்மையாகுமோ?
வந்த பணத்தில் பெற்ற கார்கள் பெறுமையாகுமோ?
சிலைகளாக நிற்பதனால் செறுமை போகுமோ?
சொகுசு வாழ்க்கை என்ரும் உமக்கு சொந்தமாகுமோ?
சேர்த்த சொத்து உம்மை என்று கடவுளாக்கும்மோ?

- Chennaizoom

நீச்சல்

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.
அது தங்களுக்கு  என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.
- வண்ணதாசன்

பாதை

நீ செல்லும் பாதையில் தடைகள் ஏதும் 
இல்லை என்றால் அது நீ போகும் பாதை அல்ல 
யாரோ சென்ற பாதை. ்
- Karthikeyan Petcha

உழைப்பின் மேன்மை............

உழைப்பின் மேன்மை பற்றி
உனக்கு உரைத்திட வேண்டும்
தன் வியர்வை உப்புக் கரிக்க
ஊரார் வியர்வை இனிக்கும்
ஊரைச் சுரண்டி தின்பவனுக்கும்
உழைக்காமல் தின்பவனுக்கும்.... 

நீ
உன் வியர்வை இனிக்க
உழைத்த பின்பு
உணவு கொள்
இனிமை பிறக்கும்.....

மடிப்புக் குலையாத
உடுப்பைவிட
மதிப்புக் குறையாத
உழைப்புதானடா
மேன்மையானது.
- Karthikeyan Petchiappan

ஓசையில்லாப் பயணம்....

முட்டும் மூச்சிற்கு
விக்கித்துப் போகும் உடல்;
வறண்டத் தொண்டையால்
வந்து நிற்கும் கண்ணீர்!

தடுமாறும் திசுக்களால்
தடம் மாறும் சுவாசம்;
கரம் கொண்டுத்
தலைக் கோதினாலும்
தவணைமுறையில்
திக்கும் நாவு!

தொப்புள் கொடி வெட்டி;
குருதிக் கழுவக் குளியல்;
பிறந்தப்போது;
தொடர்பை அறுத்து
தொலைத் தூரப்பயணத்திற்குக்;
குளியல் உனக்கு;
இறந்தப்போது

ஒத்திகைக் காணா;
ஓசையில்லாப் பயணத்திற்கு;
இருள் சூழ்ந்தப் புகுந்தவீடும்;
கட்டியணைக்கும் வெள்ளை ஆடையும்;
கண்ணீருடன் வாசல் வரைத்
தொட்டுச்செல்லும் துணையும்;

செல்லப்பெயர் எத்துனை
இருந்தாலும்;
நாங்கள் சொல்லும்
பெயர் ஒன்றுதான் உனக்கு;
ஜனாஸா!
- Iyappa Madhavan

பாசமுள்ள வேளையிலே, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேளையிலே, பாசம் வந்து சேரலையே ....

கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்


ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேளையிலே, காசு பணம் கூடலையே,

காசு வந்த வேளையிலே, பாசம் வந்து சேரலையே

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????
- Hasini Sweetie

நீச்சல்

எல்லோரும் இந்தும்பான்”
வர்ண பாகுபாடு சமூக தேவைம்பான்!

”இந்து ஒற்றுமைம்பான்”
மலம் திங்க வைக்கும்போது மட்டும் மாயமாவான்!
... 
”நாட்டு பற்றும்”ம்பான்
கார்கில் சவ பெட்டியிலே ஊழல் செய்வான் !

”பாகிஸ்தான் எதிரி” ம்பான்
ஜின்னாவுக்கு பல்லாக்கு தூகுவான்!

”ஊழலுக்கு எதிரி”ம்பான்
சுரங்க ஊழலில் உடல் வளர்ப்பான்!

”பசு வதை”ம்பான்
எருமை வெட்டபடுவதை ஏறெடுக்கமாட்டான்

”இடஒதுக்கீட்டெதிரி”ம்பான்
மனி ஆட்ட மட்டும்முழு ஒதுக்கீடும்பான்!

”பாரதமாதா”ம்பான்
அருனாச்சல்,கச்சதீவு பற்றி பேசவே மாட்டான்

”ஒருவனுகொருத்தி”ம்பான்
சிவனையும்,முருகனையும்,கடவுளென் பான்

”பொது சிவில் சட்டம் ”பான்
பொது இந்து சட்டம் பற்றி பேசமாட்டான்!

”ஒழுக்கம்”ம்பான்
நித்யானந்தா,தேவநாதனுக்கு விளக்கு பிடிப்பான்!

”கலாச்சார ஒழுக்கம்”பான்
சட்டசபையிலே நீல படம் ஓட்டுவான்!

by @மனிதம் மட்டும்
- Ilangovan Balakrishnan

கடவுள்

கடவுள் பெயரை சொல்லி கொண்டு !
காவி உடையை அணிந்து கொண்டு !
மக்கள் நிலையை புரிந்து கொண்டு !
சில போலிகள் இங்கு அலைவதுண்டு !
வாயை திறந்தால் லிங்கம் வரும் !
கையை விரித்தால் விபூதி வரும் !
கண்ணி பெண்ணை அணைத்த கரம் !
கொடுத்துவிடுமாம் பிள்ளை வரம் !
பெண்ணே உனக்கு ஏது தோஷம் !
அவன் போடுகிறான் காவியில் வேஷம் !
அவனுடன் நீ போடாதே கோஷம் !
உன் வாழ்க்கை ஆகிவிடும் நாசம் !
கவி:- என் கணவர் -ஆ.பாபு - 1999
-Babu

   
   
 
   Post Your News Feed Back Enquiry Now Refer a Friend
To Post your News, You have to login first.
Comments    (Login first)

 

 

 
Comments    (Login first)