Chennaizoom
CHENNAI INFORMATION
 
CHENNAI INFORMATIONS

Home

Auto Fare 2007
Be Indian
Corporation
Corporation Acievements
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Online Grievance Forum
Pattinathar
Projects in north chennai
Swin Flu
The Boss
The Cops
 
SEARCH AD
Ad#
Example
AD588
 
 
 
Select New Category
 

மனமது செம்மையானால்

மந்திரங்கள் செபிக்க வேண்டாம்

 

 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்) 

 
மதத்தின் மேல் நம்பிக்கை வைத்தால் ஆன்ம நேய ஒருமைப்பாடு வராது, மாறாக தங்களுடைய மதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கு வளர ஆரம்பிக்கும். அதனால் எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பக்குவம் சன்மார்க்க தீட்சை என்பது ஞானத்தில் ஞானம் -எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நிலையில் தான் உள்ளது. அதனால் தான் ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம்,ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளருளுக்கு சிறிதும் பாத்திரமாகார்கள் என்று  வள்ளலார் குறிப்பிடுகிறார்கள்.வர

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்

வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்று திருமூலர் சொல்வது இங்கு நோக்கத்தக்கது.

 

அகங்கார ஒழிவு

 தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும் என்பது வள்ளலார் அருளுரை.   தற்சுதந்திரம் இல்லாமல் இருந்தால் தான் இறைவனின் பெருமையை நினைந்து நினைந்து உணர முடியும் என்பது இதன் மூலக்கரு.

இறைவனின் பெருமையை உணர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அருளாளர்கள் தங்களது நிலையினை உணராமல் தாங்கள் மட்டுமே சில தியான உண்மைகளை கண்டுப்பிடித்திருக்கிறோம் என்று பறைச் சாற்றுகிறார்கள்.

இறைவனால் தான் அனைத்தும் வெளிப்பட்டது என்று தெரிவிக்காமல் தங்களது முத்திரையைப் பதித்து தங்களது பெயர்கள் பிரபலமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

          திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் தன்னுடைய பெயரையோ, மொழியையோ, இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடாமல் பொதுமறையாக (secular)  எழுதி வைத்தார். இது அவருடைய பொது நோக்கு பார்வையை எடுத்துக்காட்டுகிறது.

சில தியான மையங்களில் அவ்வருளாளர்கள் கையை காண்பித்து அருளாசி வழங்குவது போல் இறைவனுக்கு  சமமாக அவரது படத்தை வைத்திருக்கிறார்கள். இது அவருக்கு புகழை தரலாம் ஆனால் அருள் கிட்டாது என்பது திருவருட்பாவை படிப்பவர்களுக்கு தெரியும்.

இறைவனை உள்முகமாக உணர்ந்த சில அருளாளர்கள் மாயை வசப்பட்டு “நான்” என்ற அகங்காரத்தில், நானே இறைவன் என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதனால் தான் வள்ளலார் மிக அருமையான ஒரு வழியை இறைவன் தனக்கு தந்ததாக கூறுகிறார்- எல்லா உயிர்களிடத்தும் இறைவனை காணும் நிலையே மிகப்பெரிய நிலை-ஞானத்தில் ஞானம்.

சமீபத்தில் வாழ்ந்த சில அருளாளர்கள் செய்த தவறுகள் பல உள்ளன. சிறிய ஒளியைப் பார்த்து, இறுமாந்து, ஏமாந்து “நான்” அனைத்தையும் அடைந்து விட்டேன், கண்டுக்கொண்டேன் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதோடு அவர்களை நாடி வரும் சீடர்களையும் அபக்குவ நிலைக்கு ஆளாக்குகிறார்கள்.

          காய கற்ப பயிற்சி மட்டுமே இறைநிலையை காண்பிக்கும் என்பது அவர்களது வாதம். காய கற்ப பயிற்சியும் தேவையில்லை என்பது சித்தர்களின் வாதம். அதனால் தான் அகஸ்தியர் ஞானத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்

-அகஸ்தியர் ஞானம்

 எனவே வள்ளலார் வழி நிற்போர் அகங்காரம் ஒழித்து இறைவனை ஜோதி ரூபமாக ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபாடு செய்து எல்லா உயிர்களிடத்தும் அன்போடு நடந்து கொண்டால்  மனம் செம்மையாகி  இறை நிலை வெளிப்படும். இந்நிலை மற்றவர்கள் காணா உயர்நிலையாகும்.

அவ்வாறு ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் காய கற்ப பயிற்சியை பயிலுவோர் உண்மை இறை நிலையை உணர முடியாது. அதுவும் ஒரு உலகியியல் உணர்வாக போய்விடும், வள்ளலார் கண்ட ஞான நிலைக்கும், குண்டலினி யோக பயிற்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. இதை சன்மார்க்கிகள் உணர வேண்டும்.

மேலும் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் தியான மைய யோகிகள் அவர்களை முன் வைத்து யோக பயிற்சி மேற்கொள்வது ஏன் ? இதுவும் தற்சுதந்திரமின்மை இல்லாததால் தான் ஏற்படுகிறது.

வள்ளலார் “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இந்த உலக மக்கள் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள் ஐயோ! நம் சகோதர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் தானே என்னைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன் என்கிறார்”.

இன்றைக்கு எத்தனை தியான மைய யோகிகளின் மன நிலை இவ்வாறு இருக்கிறது என்பதை சற்றே யோசித்து பார்த்தீர்களேயானால் வள்ளலாரின் செம்மை மனம்- அகங்காரமில்லா மனம்  உங்களுக்கு புரியும்.

  Muthamil Mantram <Click>
 

Enquire Now     Refer a Friend      
 
 
 
PREMIUM AD
 
Accounts Package
Alphazee Automobiles
Coimbatore Plot sale
CrystalHomes Plots
Guest House Available
Jemi New Flsats
Hyundai Car Showroom
ICICI Prudential 
JP Greenbrier Gated community.
Kovai Medose
K7 Antivirous
Logistic Service Available  
Manapakkam Ind.House for sale 
Mahindra Car Show Room
Mutual Fund
Nellai Rose Garden
Installment scheme
Nellai Pattinam  
Ooty Plot sale
Pallikaranai New Flat sale
Perungudi 300 new Flats sale
Royal Garden Nellai Plot sale
Tirunelveli Plot Sale.
Uthiramerur Gated Community plot sale
Vandalur New 104 Flats
 
 
TAMIL SITES
Light of Thuvarankuruchi
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Pattinathar
Prominant Woman
 
RELIGION
Home
Fundamentalist
Co-ed University in Saudi Arabia
Fundamentalist Vs Humanity
Human Right-Women A
Sati
Human Right-Women B

My Religion-Paraman

Women's right in Saudi
Women in Muslim Society
Women in Islam
Tamil Poet
 
Tamil